News Update
தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு,
நோக்கம் :
வணக்கம். தேர்ந்த அடையாளங்களைக் கொண்ட உலக மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று. அந்தத் தனித்த அடையாளங்கள் இன்றளவும் தொடர்ந்து வருகின்ற வேளையில், அதன் கூறுகளைப் பகுத்து வழங்க முயற்சிப்பதும் நல்ல முயற்சி தான். அப்படியான முயற்சியின் முதற்படிக்கட்டுத் தான் இந்த “முத்தரசி” – ஆய்விதழ் ஆகும்.
மக்களின் பரிமாற்றக் கருவி மொழியாகும். ஆகவே எந்த மொழியாயினும் பெருமைக்கும் சிறுமைக்கும் இடமில்லை. காய்த்தல் உவத்தல் இல்லாக் களங்களைப் பகுத்து ஆய்ந்து வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இவ்வாய்விதழ் செயல்பட உள்ளது.
பயணிக்க வருக
பேராளர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் நேர்த்தியான ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அனைத்து ஆய்வுக் கட்டுரைகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
திறந்தநிலை அணுகல் அறிக்கை
திறந்தநிலை அணுகல் முறை சார்ந்த கொள்கைகளின் படி எமது சஞ்சிகை வாசகர்கள் கட்டுரைகளை நேர்மையான முறையில் தேடவும், வாசிக்கவும், தரவிரக்கம் செய்யவும், நகல் எடுக்கவும், விநியோகிக்கவும், அச்சிடவும் மற்றும் இணைப்பு எடுக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
உரிமம்
எமது சஞ்சிகை சிசி பிஓய் கிரியேட்டிவ் காமன்சு ஆட்ரிபியூசன் 4.0 இன்டர்நேசனல் உரிமம் http://Creativecommons.org//license/by/4.0/. பயன் கொண்டுள்ளது. இது உண்மையான படைப்புக்களைத் தகுந்த குறிப்பு முறைகளுடன் பயன்படுத்த, விநியோகிக்க மற்றும் மீட்டு உருவாக்கம் செய்ய அனுமதிக்கிறது.
This work is licensed under Attribution-NonCommercial 4.0 International
பதிப்புரிமை
கட்டுரையாளரிடம் உரிம மாற்று படிவம் பெற்றுக் காப்புரிமையைச் சஞ்சிகையே பெற்றுக் கொள்ளும். படைப்பாளர்கள் அதை தவறான நோக்கத்தில் தவறான பாதையில் பயன்படுத்திச் சிக்கல்களை உருவாக்கிக் கொண்டால் அதற்கு இதழின் பதிப்பாசிரியர் பொறுப்பேற்றுக் கொள்ளமாட்டார்.
கருத்துத் திருட்டு நீக்கம்:
இவ்விதழ் கருத்துத் திருட்டை ஓர் அறிஞரின் கருத்திற்குச் செய்யும் அநீதியாகவே கருதுகிறது. படைப்பாளர்கள் அவர்களின் தகுதிக்கேற்ற மதிப்பை அடைய செய்வது பதிப்புக்குழுவின் நோக்கமாகும். ஆய்வாளர்களின் படைப்பில் கருத்துத் திருட்டு இருந்தால் பதிப்புக்குழு அக்கட்டுரையை நிராகரித்துவிடும்.
பதிப்பு நெறிமுறைகள் & முறைகேடு அறிக்கை:
கட்டுரைகள் ஆய்வுநெறிமுறைகளைப் பின்பற்றாமல் அமைந்தால் பதிப்பகம் நடவடிக்கை எடுக்கும். தரமான ஆய்வு மற்றும் பதிப்பு முறைகளை உறுதி செய்ய தகுந்த முடிவெடுக்கப்படும். ஆய்வுசார் முறைகளில் ஏதேனும் குற்றம் இழைக்கப்படின் அக்கட்டுரை பதிப்பில் இருந்து நீக்கப்படும். கட்டுரைகளில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென்றால் பதிப்பாசிரியருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். கட்டுரை நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், விளக்கங்கள் மற்றும் மன்னிப்புக்கோருதல் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவிப்பு செய்யப்படும். இதழின் முழுக்கோப்பு இண்டர்நெட் ஆர்க்வில் பாதுகாக்கப்படும்.
- ஆய்வுக் கட்டுரை வழங்கும் தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையைத் தமிழில் வழங்க வேண்டும்.
- ஆய்வாளர்கள் தங்கள் சொந்தச் சிந்தனையில் உருவான கட்டுரைகளையே அனுப்ப வேண்டும்
- கட்டுரைகளுக்குத் தேவையான துணைத்தலைப்புகள், அடிக்குறிப்புகளுடன் பெயர், பணி அல்லது படிப்பு, நிறுவனம், முகவரி ஆகியவற்றுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
- இரண்டு பேர் சேர்ந்து எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் ஏற்கப்படமாட்டாது.
- தேர்வு செய்யப்பெறும் கட்டுரைகள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படும்.
- கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைச் செய்யவும் முரண்பாடான பகுதிகளை நீக்கவும் கட்டுரைகளை நிராகரிக்கவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.
- ஆய்வுக் கட்டுரைகளின் முன்னுரை, முடிவுரை ஒருபத்தி அளவில்(5வரிகளில்) அமைதல் வேண்டும்.
-
ஆய்வுக் கட்டுரைகளுக்குப் பக்க வரையறை இல்லை.
-
ஆய்வுக்கட்டுரை வெளியிடுவதற்கு எனத் தனிக்கட்டணம் ஏதுமில்லை.
- அச்சு ஊடகங்கள், இணையதளங்கள் ஆகியவற்றில் இதற்கு முன்பாக இடம் பெற்றிருக்கக் கூடாது.
- ஆய்வுக் கட்டுரையை ஒருங்குறி(Unicode) எழுத்துருவில் தட்டச்சு செய்து வேர்டு (Word) கோப்பாக laks@muththarasi.org என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
- ஆய்வுக் கருத்துக்கள் அனைத்திற்கும் கட்டுரையாளரே பொறுப்பாளர் ஆவார்.
ஆய்வுக் கட்டுரை | ஆகத்து 2024 |
---|---|
தற்போதைய பதிப்பு | மூன்றாம் பதிப்பு |
ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் | 10 சூலை 2024 |
மதிப்பீடு செய்து,தகவல் கொடுக்க எடுத்துக் கொள்ளும் காலம் | எங்களுக்குக் கட்டுரை வந்து சேர்ந்த இரு வாரங்களுக்குள் தகவல் தெரிவிக்கப்படும். |
மதிப்பீடு செய்த கட்டுரைகள் வரும் பதிவு | ஆகத்து 2024 |
ஆய்வுக் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மொழி | தமிழ் |