கிறு, கின்று – பெருமாள் முருகன்
இலக்கிய விமர்சனக் கட்டுரை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். எழுதியவர் நன்கு அறிமுகமான எழுத்தாளர்தான். ‘சில கதைகள் பழைய இலக்கியச் செய்திகளை நினைவுபடுத்துகிறவை’ என்று ஒரு தொடர். ‘நினைவுபடுத்துகின்றவை’ என்றல்லவா வர வேண்டும்? சரி, அச்சுப்பிழையாக இருக்கக் கூடும் எனக் கருதி மேலே படித்தேன். இன்னோரிடத்தில் ‘ஒருவருக்கு ஈர்ப்பூட்டுகிறவை எல்லோரையும் ஈர்க்கும் எனச் சொல்ல இயலாது’ என்றொரு தொடர். ‘ஈர்ப்பூட்டுகின்றவை’ என்பது தானே சரி? கண்ணோட்டினால் ‘பேசுகிறவை’, ‘விவரிக்கிறவை’ என்றெல்லாம் கண்ணில் பட்டன. நவீன உரைநடையில் இப்படி எழுதும்…