மதிப்பாய்வு செயல்முறை
தாங்கள் அனுப்பிய படிக்கான(Copy) முதன்மையான தரச் சரிபார்ப்பு மதிப்பாய்வினை இவ்விதழ் செயல்முறைபடுத்துகின்றது. தங்களுடைய தலைப்பும் அதனுள்ள கருத்தும் ஆய்வுக்குட்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக இரட்டை மறைமுக மதிப்பாய்வு செயல்முறையைப் பின்பற்றுகிறது. இந்த இரட்டை மறைமுக மதிப்பாய்வு செயல்பாட்டில், தொடர்புடைய துறைகளில் உள்ள வல்லுநர்கள் மதிப்பாய்வாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், மேலும், அவர்கள் தாங்கள் வழங்கிய கட்டுரையின் தரம், அசல் தன்மை, கல்வித் தரநிலைகள், தொழில்நுட்ப உள்ளடக்கம், ஆவணப்படுத்தல் மற்றும் இதழின் நோக்கத்திற்கான இன்றியமையாமை போன்றவைகளை ஒவ்வொரு கண்ணோட்டத்திலிருந்தும் பகுப்பாய்வு செய்வார்கள். மதிப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் கட்டுரை தரம் பிரிக்கப்பட்டுக் கீழ்க்கண்ட செயல்முறைகளில் ஒன்று பின்பற்றபடும்.
- உடனடி பிரசுரத்திற்கு முழுமையாக ஏற்றுக் கொள்ளுதல்.
- சிறிய திருத்தங்களுக்கு உட்படுத்துதல்.
- பெரிய மாற்றங்களுக்கு உட்படுத்துதல்.
- நிராகரித்தல்.
சிறிய/பெரிய திருத்தங்களைச் செய்ய குழு பரிந்துரைத்தால், மறுஆய்வு அறிக்கையில் உள்ள கருத்துகளின்படி, கட்டுரை வழங்கிய ஆசிரியர் திருத்த வேண்டும். சுமூகமான வெளியீட்டுச் செயல்முறைக்கு ஆசிரியர் திருத்தப்பட்ட கையெழுத்துப் பிரதியை சரியான நேரத்தில் இதழ் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.