தயவு  செய்து  தற்கொலை  செய்துகொள்

“தயவு  செய்து  தற்கொலை  செய்துகொள்” ப. கணேஷ்வரி, தமிழ் முனைவர் பட்ட ஆய்வாளர், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி. இதனுள்…                         காலந்தோறும் இலக்கியங்களின் பாடுபொருள்கள் மீதான பல பரிணாமங்கள் குறித்து ஆய்வுலகம் அறியும். சமூகம் எதைச் சுமக்கிறதோ அது படைப்பாக மிளிர்கிறது. அகம், புறம், இன்பம், துன்பம், அரசன், புலவன், மக்கள் என வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் குழுமம், தன்னுள் முரண்பட்டு இயங்கியதை வரலாறு பறைசாற்றும். “முரண்பாடு எங்கு வினையாற்றுகிறதோ அங்கு வினை மேம்படும்”…

Read More

மெய்கண்டார் காட்டும் அத்துவிதம்

அத்துவிதம்அத்துவிதம் என்பது இரண்டு பொருள்கள் இருந்தும் இரண்டு என்று கூற இயலாதப்படி ஒன்றாவதைக் குறிப்பதாகும். கண்ணால் காணக்கூடியப் பருப்பொருளில் இத்தகைய நிகழ்வு ஏற்படுவதில்லை. இந்நிகழ்வு கண்ணிற்குப் புலப்படாத சூக்குமமாய் அமைந்துள்ள அறிவினுள் ஏற்படுவதாகும்.பேரறிவுடைய இறைவன் உயிர், உலகப் பொருளுடன் வேற்றுமை இல்லாமல் கலந்திருக்கிறான். இவ்வாறு கலந்திருக்கும் நிலையில் இறையும் உயிரும் இரண்டு என்னும் தன்மைத் தோன்றாமல் ஒன்றெனும் தன்மையுடன் இருக்கின்ற நிலையை ‘அத்துவிதம்’ என்பர். ஆதலால் அத்துவிதம் என்பது பொருளால் இரண்டாகவும், கலப்பினால் ஒன்றாகவும் அமைந்திருப்பதைக் குறிப்பதாகும்….

Read More

முக்கூடற் பள்ளில் கலகக்குரல்

முக்கூடற் பள்ளில் கலகக்குரல் வை. அருட்செல்வி                                             துணைப் பேராசிரியர்,அரசுக்கல்லூரி                                             மூணாறு தமிழ் இலக்கிய வரலாற்றில் காலந்தோறும் பல இலக்கிய வகைகள் தோன்றியுள்ளன.  செவ்வியல் இலக்கியங்கள், அறஇலக்கியங்கள், காப்பியங்கள் என அழியாப் புகழ்பெற்ற இலக்கிய வரலாற்றை உடையது தமிழ் இலக்கியம்.  அந்த வகையில் சிற்றிலக்கியமும் கருத்தாழம் மிக்க ஓர் இலக்கிய வகையாகும்.  பாட்டியல் நூல்கள் தொண்ணூற்றாறு வகையான சிற்றிலக்கியங்களைப் பட்டியலிடுகின்றன. இவ்விலக்கிய வகை அமைப்பிலும், பாடுபொருளிலும் புதுமை உடையது.  எனவே தான் தொல்காப்பியர் புத்திலக்கிய வகைகளை…

Read More

‘பொன்விலங்கு’ நாவல் காட்டும் பணியிடக் கலகங்கள்

‘பொன்விலங்கு’ நாவல் காட்டும் பணியிடக் கலகங்கள் செ.மெல்வின் ராஜா உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை அமெரிக்கன் கல்லூரி, மதுரை-02. முன்னுரை: மனித இனம் தோன்றிய காலம் தொட்டே கலகங்களும் உண்டாகியிருக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் திருவிலியத்தில், உலகம் கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட போது மனிதரையும் உண்டாக்கி, அவர்கள் பணிபுரிய ஒரு தோட்டத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தாh.; அந்த தோட்டத்தில் கடவுள் புசிக்க வேண்டாம் என்று சொன்ன மரத்தின் கனியை சர்பத்தின் தூண்டுதலால் பெண் உண்டது மட்டுமல்லாமல் தன் கணவனுக்கும் கொடுத்து புசிக்கவைத்து கடவுளின்…

Read More

ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது – ஜெயகாந்தன்

ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது – ஜெயகாந்தன் வேப்ப மரத்தடியில் நிற்கும் பசுவின் பின்னங் கால்களைக் கட்டி விட்டு மடியைக் கழுவுவதற்காகப் பக்கத்திலிருந்து தண்ணீர்ச் செம்பை எடுக்கத் திரும்பிய சுப்புக் கோனார்தான் முதலில் அவனைப் பார்த்தான். பார்த்த மாத்திரத்திலேயே கோனாருக்கு அவனை அடையாளம் தெரிந்து விட்டது. அதே சமயம் அவன் மார்புக்குள் ‘திக்’கென்று என்னமோ உடைந்து ஒரு பயமும் உண்டாயிற்று. அடையாளம் தெரிந்ததால் தனக்கு அந்த பயம் உண்டாயிற்றா அல்லது அவனைக் கண்ட மாத்திரத்திலேயே தன்னைக் கவ்விக்…

Read More

சிறுகதை எங்கிருந்தோ வந்தான் – மௌனி

தென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடுதியில், தங்கியிருந்த மாணவர்களில் அநேகர் கோடைவிடுமுறைக்காகத் தத்தம் ஊருக்குசென்றுவிட்டனர். என் பக்கத்து அறையும் காலியாகக் கிடந்தது. அன்று ஒரு நாள்; வரண்ட காற்றோடு வந்தவர் போல ஒருவர், திடீரென என்பக்கத்தறையில் குடிவந்தார். அதிகமாக அவரை வெளியில் காணக்கூடவில்லை. சதா தன் அறையிலும், மற்றும் இரவில் வெகுநேரம்கூரையற்ற மேன் மாடியிலும் பொழுது போக்கினார். இரண்டொரு தரம்…

Read More

நீர் விளையாட்டு – பெருமாள் முருகன் சிறுகதை

அவனை அவர்கள் அழைத்தபோது மிகுந்த தயக்கத்தைக் காட்டினான். ‘நானா’ என்று வாய்க்குள்ளே மெல்ல இழுத்தான். ஆனால், அவன் நினைவுப் பாசிகள் துடைக்கப்பட்ட பளிச்சிடலின் அடியில் விருப்பமும் ஆர்வமும் புடைத்தெழும்பின. குழந்தைகள் அவனை மேலும் வற்புறுத்தலாயினர். அங்கே விருந்தாளியாக வந்திருந்தான் அவன். ஓரளவுக்கு நெருங்கிய உறவுதான். அடிக்கடி வரவில்லை என்பதே இயல்பாக இருக்க விடவில்லை. கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தைகள், எட்டிலிருந்து பன்னிரண்டு வயதிற்குள்ளான மூவர் – சிறுமி, இரண்டு சிறுவர்கள் – அவன் மடிமீது புரளவும் விளையாட்டின்  …

Read More

சோகவனம் – சோ. தர்மன்

சோகவனம் – சோ. தர்மன் கற்பாறைகளின் இடுக்குகளிலும் கூட தன் வேர் பதித்து நீருறிஞ்சி மண் நீக்கி காற்றைச் சுவாசிக்கும் ஆத்ம வெறியில் தலை நீட்டி சுட்டெரிக்கும் அக்னி ஜ்வாலையின் சூரியத் தகிப்பில் உயிர் பெற்று தன் இனம் பெருக்கும் இனவிருத்தி என்னும் மாய வலைக்குள் சிக்கிக் கொண்டுதான் அந்த இரண்டு இளம் கிளிகளும் ஆனந்தித்துச் சுகித்திருந்தன. காற்றசைவிலும் வனங்களின் ஏகாந்த மௌனத்திலும் இலைகள் சலசலக்கும் தாலாட்டிலும் நறுமணம் வீசும் காட்டுப் பூக்களின் சௌந்தர்ய வாசனையில் நாசிகளின்  …

Read More
Welcome to Muththarasi.org