சிறுகதை எங்கிருந்தோ வந்தான் – மௌனி
தென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடுதியில், தங்கியிருந்த மாணவர்களில் அநேகர் கோடைவிடுமுறைக்காகத் தத்தம் ஊருக்குசென்றுவிட்டனர். என் பக்கத்து அறையும் காலியாகக் கிடந்தது. அன்று ஒரு நாள்; வரண்ட காற்றோடு வந்தவர் போல ஒருவர், திடீரென என்பக்கத்தறையில் குடிவந்தார். அதிகமாக அவரை வெளியில் காணக்கூடவில்லை. சதா தன் அறையிலும், மற்றும் இரவில் வெகுநேரம்கூரையற்ற மேன் மாடியிலும் பொழுது போக்கினார். இரண்டொரு தரம்…